Friday, December 3, 2010

விண்ணப்பம்

நடு இரவில் கண்விழிக்கும் போதும்

கொட்டும் மழையில் வீடு திரும்பும் போதும்

நாக்கில் காய்ச்சல் கசக்கும் போதும்

நாவலின் கடைசிப் பக்கம் வாசிக்கும் போதும்

ஜன்னல் இருக்கை ரயில் பயணத்திலும்

கர்ப்பக்கிரகத்திலிருந்து வெளிவந்தவுடனும்

உன் முகம் பார்க்கத்தான் வேண்டுகிறேன்

என்னோடே இருப்பாயா, எப்போதும்?

2 comments:

  1. இந்தக் காலத்தில், காய கல்பம் சாப்பிட்டாலே அற்ப ஆயுள்தான்!

    ReplyDelete
  2. உணர்வுகளோடு இனைந்த உங்கள் கவிதை உயிரோட்டமாக உள்ளது தோழியே!

    ReplyDelete