Monday, October 4, 2010

தேடல்

மழைக்கால நாள் ..!
பிய்த்துக் கொட்டுகிறது பேய் மழை !
பிள்ளைகள் பேயாட்டம் வீட்டுக்குள்

பள்ளிகள் விடுமுறை !
புயல் பற்றிய எச்சரிக்கை !
சாலைகளைச் சரண் அடைந்த மரங்கள் !
இவை பற்றிய கவலை இன்றி. . .
 ஈரத்தோடு குடை ரீப்பேர்க்காரன்
கூவுகின்றான் நடுத்தெருவில். . .

நல்லதாய் நான்கு குடைகள் இருந்தும்
நம்பிக்கையோடும் ..நனைந்த உடைகளோடும் சுற்றுகின்ற

 அவனுக்கு கொடுக்க
பழைய குடை ஏதேனும் இருக்கிறதா..
பரண் மேல் தேடுகின்றேன்...