நினைவறிந்த நாளிலிருந்து
இருட்டு இடுகாடு சுடுகாடு எதுவென்றாலும் பயந்தான்
அறியாத ஊர்களில்
இறுதியூர்வலங்களையும்
தெரியாத நபர்களின்
சவ அடக்கங்களையும்
முடிந்தவரை விலக்கி நடந்துள்ளேன்.
சர்வ நிச்சயமாய்............
என்னையும் ஒருநாள்
தூக்கிவந்தொரு காட்டில்
"இன்றிலிருந்து இங்கே தூங்கடா ராஜா"
என்று கிடத்திவிடத்தான் போகிறார்கள்
இருந்தும் இன்னும்
எதுக்கென்றுதெரியவில்லை
இருட்டு இடுகாடு சுடுகாடு
எல்லாவற்றுக்கும் பயம்தான்