Monday, September 27, 2010

எதை விளக்கலாம் ? எதை விலக்கலாம் ?

சமுதாயத் தில்
அவரவர் தாய்மொழி தானே
ஆதாரஸ்ருதி ?

எங்கள் தமிழி லக்கியம்
வழக்காடு மன்றங்களில்
வழுக்கி விழுந்து
பட்டி மன்றங்களிலே
படுத்துக்கிடக்கிறது.


அன்றாட மொழியையும்
ஒரு கை பார்த்து விட்டோம்..
இஸ்திரிப் பெட்டி
அயர்ன் பாக்ஸ் ஆனது
வணக்கம் மறைந்து
குட் மார்னிங் ஆனது
இது கூடப் பரவாயில்லை
மம்மி டாடி  வந்ததில்
எங்கள்
அம்மா அப்பாக்கள்
அனாதைகள் ஆயினர்

சுருங்கச் சொன்னால்
எங்கள்   உயிரினும்
மேலான  தமிழ் மொழியை
கான்வென்கெளில்
காணடித்துவிட்டு
அருங்காட்சியகங்களில்
தேடிக்கொண்டிருக்கிறோம்

எங்கும் எதிலும் அறியாமை
எதை விளக்கலாம் ?
எதை விலக்கலாம் ?