Wednesday, December 1, 2010

கண்ணாடிச் சில்லுகள்


மௌனங்களுக்கூடாக
சிந்திக் கிடந்த வார்த்தைகள் 
வெப்பம் தாளாமல் 
சூடேறுகின்றன ...
மெலிதாக கைவிரல்கள்
நடுங்கியவன்னம்
தொலைபேசியின்
மறுமுனையிலிருந்து
பேசிக் கொண்டிருந்தேன்
நான் ...
பயணத்தில் எங்கோ
தொலைக்கப்பட்ட
பையில்
நமது  கடைசி
சந்திப்பின் போது
பரிமாறிய அன்பு
நொறுங்கிக் கிடக்கிறது
பிரிக்கப்படாத பிஸ்கட்டென ...
சில நிமிட
நல விசாரிப்புகளுக்குப் பிறகு 
மீண்டும் இடமாறிக்கொள்கிறோம்  
நாம் ...
இன்று
எனது கனவில்
மழைத்துளிகள்
விழுந்து நொறுங்கி

பாதையெங்கும்
பரவிக் கிடக்கின்றன
கண்ணாடிச்
 சில்லுகள் ...

2 comments:

  1. இதுவும் ஒரு நல்ல கவிதை!
    காதல் தோல்வியின் நிழல் தெரிகிறதே!

    ReplyDelete
  2. பாதையெங்கும்

    பரவிக் கிடக்கின்றன

    கண்ணாடிச்

    சில்லுகள் ...
    கண்ணாடிச் சில்லுகள் காலைக் குத்தாமல்
    மனசைக் குத்திவிட்டதே!

    ReplyDelete