Thursday, December 16, 2010

ஏன் 

ஒற்றை வரியில் சொல்வதானால் 

நான் தொலைந்துதான் போனேன் ..

ஊர்க்குருவியின் இறக்கைகளாக 

எப்போதும் துடித்துக் கொண்டிருந்த 

மனசிற்கு 

ஏன் இந்த திடீர் பலவீனம் ?

எங்கே ஒளிந்துகொண்டன 

என் ஆன்மாவின் இனிய சங்கீதங்கள் ?

தடிமனான புத்தகங்களிடையேயும் 

கனத்து போயின கண்கள் 

முன்னே விரிந்திருக்கும் 

சவால்களிற்காக 

கொஞ்சமும் இங்கிதமற்ற முறையில்

அவை என் தசைகளை வலிக்கின்றன ...

எந்த நிமிடமும் அறபோகின்ற

கயிற்று உறவுகளை  பேணுதலிலே

வலு விழக் கிறேன்
தினமும் புதிய சிக்கலாய் பிரிகின்றன
 
நாட்கள்
 
கடந்து போன ஒரு மழைக்காலத்தையும்
 
குயிலின் கூவளையும்
 
இனியும் பிரியத்துடன் ரசிப்பேனா ?
 
கருகிப் புகை மண்டும் விளக்கினருகிருந்து
 
தொலைந்து போன நட்களிற்காய்
 
ஏங்குகிறேன் ...
 
அவை மீண்டும் வராது போகலாம்
 
என்றென்றைக்குமே ...
 
மௌனத்தினிடையேயோர்
 
புள்ளிச் சலனம் போல
 
எல்லாமாகவும்
 
ஒன்றுமில்லாமலும் நான் ...
 
 

2 comments:

  1. ஒன்றுமில்லாததற்கு வருத்தப்படுவதைவிட
    இருப்பவர்களுக்கு வருத்தப்படுவது சால சிறப்பு!

    ReplyDelete
  2. bharathi kanda puthumai pen kavithavaaaa...keep it up........by
    your friend anbu from madurai

    ReplyDelete