Monday, September 20, 2010

கவிதை....

இப்பொழுதெல்லாம் நான் நிறைய கவிதைகள் எழுதுகிறேன்.
'எதைப் பற்றி' என்கிறீர்களா ?
எது பற்றி வேண்டுமானாலும் .
என் மனதுக்கு என்ன எழுதத் தோன்றுகிறதோ அதை எழுதுகிறேன்.
உண்மையில் எனக்கு கவிதைகளை வாசிப்பதைவிட
கவிதைகளை தோற்றுவிப்பது மிகவும் பிடித்திருக்கிறது.

பிறர் எழுதிய கவிதைகளை  வாசிக்க நேருகிறபோதெல்லாம்
'இதெல்லாம் என்ன கவிதையென்று பெரிதாக எழுதிவிட்டார்கள்'
என்கிற எண்ணம் எனக்கு ஏற்படுவதுண்டு ? கவிதை எழுதத் தெரிந்த என்
நண்பன் ஒருவன்  கூட இதையே ஒரு முறை சொன்னபோதுதான்,
'இப்படிப் பலபேருக்கும் தோன்றுகிறது போலிருக்கிறது' என்று
எனக்கு தோன்றியது.

ஒரு கவிதையோ  கட்டுரையோ ஒரு வாசகனுக்குப் பிடிக்காமல் போவதில் விந்தையில்லை.ஆனால், 'கவிதை'.. ? அது எப்படி கவராமல் போகலாம் ? ஒருவேளை 'வாசகன்' என்கிற நிலையிலிருந்து நோக்காமல் 'கவிஞன்' என்கிற கர்வத்தில் பார்ப்பதால் இருக்குமோ ?

இல்லையே.. பேருந்தில், இரேயிலில் பயணம் செய்கிபோது
பார்த்திருக்கிறேன்.துணுக்குகள்,கதைகள்,ஏன்... 'கேள்வி - பதில்' பகுதியைத் தேடிப் பிடித்து படிகிறவர்களைத்தான் தெரிகிறதே தவிர, பக்கங்களை புரட்டி.'கவிதை' எதுவும் இருக்கிறதா என்று ,ஒரு எதிர்பார்ப்புடன் பார்ப்பவர்கள் யாரும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. ஏன் இப்படி ?

நானும் பார்க்கிறேன். எந்தப் பத்திரிக்கை யானாலும்,
கவிதைக் கென்று ஒரு பக்கம் ஒதுக்குவ தென்பது ஒரு சடங்காகவே
மாறியிருக்கிறது.இது ஏன் ?' என்றுதான் புரியவில்லை.

'கவிதை'- அது எப்படியிருந்தாலும் -ஒரு 'இலக்கிய' அந்தஸ்தைப் பெற்றுத் தந்து விடுகிறது என்கிற தவறான அபிப்பிராயத்தின் காரணமாகவே பத்திரிக்கைகளில் கவிதைகள் வெளிவருகின்றனவோ ?

 என்ன திடீரென்று கவிதையைப் பற்றிய ஆராய்ச்சி என்கிறீர்களா ? வேறொன்றுமில்லை. என்னுடைய குழப்பத்தை உங்களில் யாராவது தீர்த்துவைக்க மாட்டீர்களா என்றுதான்..

  

1 comment:

  1. கவிதா(தை ) ஏ கவிதை எழுதுகேறதே !!!!
    பொறுத்தமான தலைப்பு .
    ஜெயகாந்தன் நாவல் அவள் எங்கே போகிறாள் ? மாதிரி
    கவிதா ஏன் கவிதை எழுதுகிறாள்.
    முதல் வலை பூ நன்று
    - வட்ட செய்யலாளர் வண்டு முருகன்

    ReplyDelete