நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ
நம்மிடம் இருப்பது மூன்று தெரிவுகள் தான்
நேற்று இன்று நாளை ....
மூன்று கூட இல்லை
ஏன்னென்றால்
தத்துவவாதிகள் சொல்வது போல
நேற்று என்பது நேற்றுதான்
அது நமது நினைவுகளில் மட்டுமே
தங்கிஇருக்கிறது
ஏற்கனவே பறிக்கப்பட்ட ரோஜாவிலிருந்து
விளையாடுவதற்கான சீட்டுக்கட்டுகள்
இரண்டு மட்டுமே உள்ளன ;
நிகழ்காலம் எதிர்காலம்
இல்லை
இரண்டு கூட இல்லை
ஏன்னென்றால்
நிகழ்காலம் என்பது
கடந்த காலத்தின் விளிம்பை
தொட்டுக் கொண்டிருக்கிறதே தவிர
அது ஒன்றும்
நிகழ்காலத்தில் இல்லை
இளமையை போல்
அதுவும் செலவாகிவிட்ட ஒன்று
கடைசியில் நம்மிடம் இருப்பது
எதிர்காலம் மட்டுமே
நான்
எனது மதுகோப்பையை
அந்த வராத நாளுக்காக
உயர்த்துகிறேன்
நம்மிடம்
இருப்பது
அது
மட்டும்தானே ?
hmm adhu mattum dhaan!
ReplyDeleteஎன்னிடம் அந்த மதுக்கோப்பை கூட இல்லையே?
ReplyDelete@rasigan : hmmmm adhu mattumae
ReplyDelete@Road traffic Pudumai Balakrishnan : என்ன ஆச்சர்யம் உங்கள் ஊரில் மது .....கோப்பை இல்லையா
Good thought of the time
ReplyDeletewhat to do ?... but all are time ...
your time .... my time... may not be the same time as you said...
good i like it..
best wishes
mail.vinoth72@gmail.com